சீனா: சீனாவை சேர்ந்த பிரபல மாத இதழ் நிறுவனமான ”ஹுரூன் ரிப்போர்ட்” இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

இதில் ரலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் முகேஷ் அம்பானி 1,75,400 கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.

இந்துஜா குழும நிறுவனத்தின் தலைவரான எஸ்.பி. இந்துஜா ரூபாய் 1,01,000 கோடி சொத்துமதிப்புகளைக்கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளார்.மருந்துத்துறை நிறுவனமான சன் பார்மாவின் நிர்வாக இயக்குனர் திலீப் சங்வி 99,000 கோடி ரூபாயை சொத்துக்களைக் கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஹப்பூர்ஜி பல்லோஞ்சி, லட்சுமி மிட்டல் உள்ளிட்டோர் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.பதஞ்சலி நிர்வாக தலைமை இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இந்த பட்டியலில் புதிதாக 29 இடத்தை பிடித்துள்ளார்.

Advertisements