சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா 7 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம், மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில், பவுலர்களுக்கான தர நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் இணைந்து முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

Advertisements