சென்னை: மணிரத்னம் இயக்கும் தளபதி-2வில் நாயகனாக ரஜினி நடித்த வேடத்தில் விஜயும், மம்மூட்டி நடித்த வேடத்தில் விக்ரமும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய கேங்ஸ்டர் படங்களில் நாயகன், தளபதி படங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்றுவரை அந்த படங்கள் பேசப்பட்டு வருகின்றனர். இதில் தளபதி படத்தில் ரஜினியும், மம்மூட்டியும் நண்பர்களாக நடித்திருந்தனர். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை காற்றுவெளியிடை படத்தை அடுத்து இயக்குகிறார் மணிரத்னம். அதற்கான கதை விவாதமும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.அதாவது, மணிரத்னம் இயக்கும் தளபதி-2வில் நாயகனாக ரஜினி நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறாராம். மம்மூட்டி நடித்த வேடத்தில் விக்ரம் நடிக்கிறாராம். இவர்கள் இருவரிடமும் சமீபத்தில் கதையை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம் மணிரத்னம்.

விஜய், விக்ரம் இருவருமே நண்பர்கள் என்பதால் அவர்களை இணைப்பது எளிதாகி விட்டதாம். மேலும், அட்லி இயக்கும் படத்தில் நடித்து முடித்ததும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், மணிரத்னம் படத்தை முடித்த பிறகுதான் முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளில் வெளியிடப்பட உள்ளதாம்.

Advertisements