புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ள தாக மத்திய அரசு பிப். 15-ல் அறி வித்தது. இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலி யுறுத்தி நெடுவாசலில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, வடகாடு, நல்லாண்டார்கொல்லை ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

எரிவாயு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாதென தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்தார். அதேபோல, மக்கள் ஏற்காத இந்த திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால், நெடுவாசல் போராட் டம் முடிவுக்கு வருமென எதிர்பார்க் கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், காவல் கண் காணிப்பாளர் ஜெ.லோகநாதன் உள்ளிட்டோர் போராட்டக் குழுவி னரிடம் அரசின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கினர். ஆனால், போராட்டத்தை விலக்கிக்கொள்ள போராட்டக் குழு முன்வரவில்லை.

எனினும், போராட்டக் குழுவை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக இருந்தது. ஆனால், அந்த சந் திப்பை போராட்டக் குழு நிராகரித் ததால், கடந்த 2 நாட்களில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை. இதைத் தொடர்ந்து நேற்று மாலை நெடுவாசலில் இருந்து நல் லாண்டார்கொல்லை வரை பேரணி நடைபெற்றது. போராட்டக் குழு வினர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. அப்போது, மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து அறி விப்பு வெளியிடுமென எதிர்பார்க் கிறோம். அறிவிப்பு வராவிட்டால் போராட்டம் தொடரும்” என்றனர்.

நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடர வேண்டும் என போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பங்கேற்ற, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்தார். இதேபோல, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தரும் கலந்துகொண்டார்.

Advertisements