சென்னை: அதிமுக அரசு மீனவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற விழாவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங் களுக்கான ரூ.235.61 கோடி மதிப் பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:இலங்கை கடற்படையினர் நடத் திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன். உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு உடனடி யாக ரூ.5 லட்சம் நிதி வழங்க உத்தரவிடப்பட்டது.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தற்போது மத்திய அரசு இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. தமிழக அரசு மீனவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.தமிழகத்தில் 140 ஆண்டுகளுக் குப் பிறகு வரலாற்றில் கண் டிராத வறட்சி ஏற்பட்டுள்ளது. நீராதாரங்களை திறம்பட மேலாண்மை செய்யவும், மழை நீரை சேமித்து புதிய நீராதாரங்களை உருவாக்கவும் குடிமராமத்து திட்டத்துக்கு புத் துயிர் அளிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பில் செயல் படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க கிராமப் பகுதிக்கு ரூ.350 கோடி, நகர்ப்புறங்களுக்கு ரூ.160 கோடி மதிப்பில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறை மூலம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நீராதாரங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்களை, தமிழக அரசு பணியாளர்களுக்கும் மாற்றியமைப்பதற்கு தேவையான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கடம் பூர் ராஜு, ராஜலெட்சுமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்பிக்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்தி முருகேசன், விஜயகுமார், எம்எல்ஏக்கள் வசந்தகுமார் (காங்கிரஸ்), முருகையாபாண்டியன், செல்வ மோகன்தாஸ், இன்பதுரை மற்றும் அரசுத்துறை செயலர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் நன்றி கூறினார்.

Advertisements