சென்னை: எனக்கு இந்த உலகத்திலேயே மிகப் பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர்தான். அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன் என்று ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ”இன்று வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி சமீப எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் என் பெயருக்கு முன்னாள் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டதை வழங்கி இருக்கிறார். அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி. அவர் அன்பிற்கு நன்றி. இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே.

எனக்கு இந்த உலகத்திலேயே மிகப் பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர்தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்தி படுத்திவிட முடியாது. அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னாள் பட்டமாக கண்மணி ராகவா லாரன்ஸ் என்று வைத்துக்கொள்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisements