இந்தியா: எஸ்.பி.ஐ. வங்கி, தனது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படியான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. இவ்வங்கி நேற்று ‘Work from Home’ என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்.பி.ஐ-ன் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே மொபைல் டிவைஸ்களைப் பயன்படுத்தி, வங்கியில் மேற்கொள்ளவேண்டிய அவசரப் பணிகளை செய்து முடிக்கலாம். இது, அவர்களது பயணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மொபைல் டிவைஸ்கள் மூலம் டேட்டாக்களை பாதுகாப்பான முறையில் கையாளவும், மொபைல் கம்பியூட்டிங் தொழில்நுட்பம் மூலம் பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும் மார்க்கெட்டிங், சமூக வலைதள மேலாண்மை, பண விநியோகம், புகார்கள், விண்ணப்பங்கள் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் வீட்டில் இருந்தே செய்யும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்றும் நேற்றைய அறிவிப்பில் எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.

Advertisements