சென்னை: பெண்களின் பாதுகாப்புக்கான கையெழுத்து இயக்கத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் சென்னையில் நேற்று தொடங்கினார்.

பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து, வர லட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளி யிட்டார். அதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் குறிப்பிட்டி ருந்தார். அவருடைய இந்த பதிவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும், ‘பெண்களுக்கு எதி ரான பாலியல் துன்புறுத்த லுக்கு எதிராக, ஒரு பிரச்சார உத்தியை முன்வைத்திருக்கிறேன். #saveshakthi (சேவ்சக்தி) என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல் கிறேன். இதை ஒரு கையெழுத்து இயக்கமாக செயல்படுத்தி மாநில அரசுக்கு மனுவாக கொடுக்கவுள் ளேன். அதில் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை தர வேண்டும்” என்று வரலட்சுமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா, விஷால், ஆர்யா, பிரசன்னா, சிநேகா, சித்தார்த், மிஷ்கின், வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மனுவில் கையெழுத்திட்டனர்.

இந்த கையெழுத்து இயக்கம் குறித்து வரலட்சுமி கூறும்போது, “இதுவரை 10,000 பேருக்கு மேல் கையெழுத்திட்டுள்ளனர். பலர் தங்கள் வேலைக்கு நடுவே இங்கு வந்து கையெழுத்திட்டனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. முதல்வர் எப்போது நேரம் ஒதுக்குகிறாரோ அப்போது அவரை நேரில் சந்தித்து இந்த மனுவை அளிப்பேன். கண்டிப்பாக அனை வரும் பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். பெண்களும் அவர்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும்” என்றார்.

Advertisements