இந்தியா: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் ‘பியிங் ஸ்மார்ட் (BeingSmart)’ என்ற ஸ்மார்ட்போன் நிறுவனத்தை விரைவில் தொடங்க உள்ளார்.

இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாண்மை குழுவை சல்மான் தற்போது தேர்ந்தெடுத்து கொண்டிருப்பதாகவும், சாம்சங் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் இதில் இடம் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

புதிய நிறுவனத்தின் போன்களை தயாரிக்க சீனாவில் ஒரு உற்பத்தி ஆலையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் போன்கள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியிங் ஹுமன் (Being Human) என்ற பெயரில் ஆடை நிறுவனம் வைத்து அதில் லாபத்தை சமூக சேவைக்கு சல்மான்கான் பயன்படுத்தி வருகிறார். இதையே புதிய ஸ்மார்ட்போன் நிறுவனமும் பின்பற்றும் என்று கூறப்படுகிறது.

Advertisements