சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: குமரிக் கடல் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, தற்போது வலுவிழந்து காற்றின் மேலடுக்கு சுழற்சியாக மாறி, தற்போது லட்சத்தீவின் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisements