சென்னை: தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தலங்களுக்கு எப்போதும் குறித்த நேரத்தில் ஆஜராகிவிடுவாராம் “தல” அஜித் குமார். இவரை போலவே தற்போது விஜய் பின்பற்றிவருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தல” அஜித் தனக்காக யாரும் காத்திருக்க கூடாது என்று நினைப்பவர். அதோடு, தான் நடிக்கும் காட்சிகள் முடிந்தும் கேரவனுக்குள் சென்று ரிலாக்ஸ் பண்ணும் வழக்கமும் அவரிடம் இல்லை. மதிய நேரம் தவிர மற்ற நேரங்களில் ஸ்பாட்டிலேயே சேர் போட்டு அமர்ந்து மற்றவர்கள் நடிப்பதை ரசிப்பார். இதனால் அஜித் படங்களில் நடிக்கும் கதாநாயகிகள், வில்லன்கள், ஹீரோவே வெயிலில் காய்ந்தபடி ஸ்பாட்டில் இருக்கிறார் நாம் எப்படி கேரவனுக்குள் இருப்பது என்று அவர்களும் ஸ்பாட்டில் அமர்ந்துவிடுவார்கள்.

மேலும், ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது முக்கிய டெக்னீசியங்கள் மட்டுமின்றி கண்ணில் தென்படும் அனைவரிடமும் சொல்லிவிட்டு தான் விடைபெறுவர் அஜித். இந்த விஷத்தை தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் தனது 61 வது படத்தில் இருந்து விஜயும் கடைபிடிக்க தொடங்கியிருக்கார். படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது அனைவரிடமும் கைகுலுக்கிவிட்டு தான் செல்கிறாராம். கூடவே, யாராவது சிறிய கேரக்டர்களில் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால் அவர்களை அலைந்து தட்டிக்கொடுத்தும் உற்சாகப்படுத்துகிறாராம் விஜய்.

Advertisements