இந்தியா: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்தநிலையில் காந்தி படம் அச்சிடப்பட்ட புதிய பத்து ரூபாய் நோட்டுகளை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம் பழைய 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்படும் ரூ.10 நோட்டுகளில் ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்துடன், வரிசை எண்களின் பின்னணியில் எல் (L) என்ற எழுத்து இடம்பெற்றிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisements