சென்னை: ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பேட்டிங் செய்ய மைதானத்துக்குள் சென்ற வீரர் ஒருவர் பேட்டை மறந்துவிட்டு சென்ற சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள பவாத் அகமது, விக்டோரியா அணிக்காக விளையாடி வருகிறார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஷெப்பீல்டு கோப்பை போட்டியின்போது பேட்டிங் செய்ய மைதானத்துக்குள் சென்ற பவாத் அகமது, பேட்டை மறந்து விட்டு நடந்து செல்லத் தொடங்கினார். பாதிதூரம் சென்ற பிறகு பேட்டை மறந்து விட்டு வந்ததை உணர்ந்த பவாத், பேட்டை எடுக்க மைதானத்தில் இருந்து திரும்பினார். இந்த சம்பவம் மைதானத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

Advertisements