மேஷம்: உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். இன்று பொறுமை குறைவாக இருக்கும் – ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். இன்று நீங்கள் அபீசில் செய்ய போகும் வேலை வரும் காலத்தில் நல்ல பலனை உங்களுக்கு தரும். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் – எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். உங்களுடன் நேரம் செலவழிக்க முடியாத வகையில் உங்கள் துணை இன்று பிசியாக இருக்க கூடும்.

ரிஷபம்: அபரிமிதமான முயற்சி மற்றும் உரிய நேரத்தில் குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவால், விரும்பிய ரிசல்ட்கள் கிடைக்கும். ஆனால் இப்போதைய உற்சாகம் தொடர்ந்திட தொடர்ந்து உழைத்துக் கொண்டிருங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள்.

மிதுனம்: விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத் துணைவர் சில டென்சனை ஏற்படுத்தலாம். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். உங்களை வெளிப்படுத்திக் கொண்டு – கிரியேட்டிவ் இயல்புள்ள வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை துணை அதனை இன்று உறுதிப்படுத்துவார்.

கடகம்: உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். முடிவெடுக்கும் போது கர்வம் வந்துவிடக் கூடாது – சக அலுவலர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணையுடனான மன ரீதியான பந்தம் இன்று பாதிக்கலாம்.

சிம்மம்: அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். இது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது சில பிரச்சினைகளை ஆரம்பிக்கும் வேலையை செய்வதற்கான நாள் அல்ல. அன்புக்குரியவருடன் சிறிய விடுமுறைக்கு செல்பவர்கள் அதிக நினைவில் நிற்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.

கன்னி: வாழ்க்கையில் சீரியஸ் தன்மையை தவிர்த்திடுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். பிரச்சினைகளை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். ரொமாண்டிக் மன நிலையில் திடீர் மாற்றம் மிகவும் அப்செட் ஆக்கும். சக பெண் அலுவலர்கள் அதிக ஆதரவாக இருந்து நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் உதவியாக இருப்பார்கள். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள குழப்பங்களை காரணம் காட்டி இன்று உங்கள் துணை சண்டையிடக்கூடும்.

துலாம்: உங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் புதிய நட்புகள் உருவாகும். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். சில காலமாக நீங்கள் யோசித்து வந்தவாறு வேலையில் முக்கியமான மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது. இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள்.

விருச்சிகம்: வலுவான எதிர்ப்பு மற்றும் அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். இந்த வேகம் தொடரட்டும். எந்த சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இது உதவும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். மனதிற்கு இனியவருடன் புரிந்து கொள்ளுங்கள். உங்களது முன் கோபம் இன்று ஆபீசில் உங்களை சிக்கலில் மாட்டி விடக்கூடும். எனவே பொறுமயை கடைபிடியுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். நீங்கள் டீன் ஏஜில் செய்த செல்ல குறும்புகளை உங்கள் துணை இனிமையுடன் இன்று உங்களுக்கு நினைவுப்படுத்துவார்.

தனுசு: உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள் – தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

மகரம்: குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதை தவிர்த்துவிட முடியாது. அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். வசிப்பிடத்தை மாற்றுவது நல்ல வளம் தரும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். திருமணத்துக்கு பிறகு பாவமான செயலும் புனிதமானதமாகும்! அப்படி பட்ட புனித்த்தை இன்று நீங்கள் செய்வீர்கள்.

கும்பம்: பொறாமை ஏற்படுத்தும் நடவடிக்கையால் குடும்பத்தில் சிலர் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் நிதானத்தை இழக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டை மீறி போய்விடும். சரி செய்ய முடியாதவற்றை சமாளித்துதான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் – முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்களை கீழே இழுத்துவிட முயற்சிக்கும் நபர்களைக் கையாள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று உங்கள் துணை உங்களை ஒரு தேவதையை போல நடத்துவார்.

மீனம்: பிறரை குற்றம் சொல்வதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்.

Advertisements