இந்தியா: ஐபில் கிரிக்கெட் தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முரளி விஜய்-க்கு பதில் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக செயல்படுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே புனே அணி, தோனிக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர், ஏற்கனவே ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளில், 3 அணிகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கேப்டனாக செயல்பட உள்ளனர்.

Advertisements