வாங்கி கடன் தொகையை ஒரே முறையில் திருப்பிச் செலுத்த தயார் என தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மல்லையா, பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, ஒன்-டைம் செட்டில்மெண்ட் முறையில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளன என்றும், இந்த முறையில் எத்தனையோ கடனாளிகள் கடனுக்கு தீர்வு கண்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வழிமுறை தமக்கு மறுக்கப்படுவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இதற்காக உச்சநீதிமன்றத்தில் தமது தரப்பு முன்வைத்த திட்டத்தை பரிசீலிக்காமலேயே வங்கிகள் நிராகரித்து விட்டதாகவும் விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார். நியாயமான முறையில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மல்லையா தெரிவித்துள்ளார்.

Advertisements