பெரம்பலூர்: பெரம்பூலிருந்து காரில் கடத்தி செல்லமுயன்ற கல்லூரி மாணவியை விழுப்புரம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மடக்கி பிடித்து மீட்டனர். கடத்தல் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், சென்னை நோக்கிச் சென்ற காரில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை மடக்கி பிடித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த விக்கிரவாண்டி போலிசார் காரில் இருந்து அலறிய பெண்ணை மீட்டு விசாரணை செய்ததில் அப்பெண் பெரம்பலூர் மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த தீபிகா என தெரியவந்தது. தனியார் கல்லூரிக்கு செல்ல இன்று காலை பேரூந்துக்கு காத்திருந்தபோது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பட்டூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், அவருடைய நண்பர்கள் குமார், காமராஜ், ப்ரவின் ஆகிய 4 பேரும் காரில் கடத்தி வந்து சென்னைக்கு செல்ல முயன்றபோது பிடிப்பட்டனர்.

தீபிகாவின் உறவினரான விக்னேஷ்வரன் தீபிகாவை ஒருதலை பட்சமாக காதலித்துள்ளதாகவும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்க்கு கடத்தி வந்ததாகவும் போலிசார் விசாரனையில் தெரியவந்துள்ளது. இதனையடு்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisements