இந்தியா: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலது பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரு டெஸ்ட் போட்டியின் போது மிட்செல் ஸ்டார்க் வலது பாதத்தில் காயம் அடைந்தார். போட்டிக்கு பின்னரும் வலி அதிகம் இருந்ததால் ஸ்கேன் எடுக்கப்பட்டது, அதில் எலும்பு முறிவு ஏற்படாது தெரியவந்துள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துளர்.

ஏற்கெனவே ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தோள்பட்டை காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதையடுத்து தற்போது ஸ்டார்க் விலகல் அந்த அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements