கிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலட்டுக்கு பணம் அனுப்பினால் 2 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என பேடிஎம் நிறுவனம் அறிவித் திருக்கிறது. பேடிஎம் வாலட்டை வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்துவதால் இந்த கட்டணம் விதிக்கப்படுவதாக அறிவித்திருக் கிறது. இது தொடர்பாக பேடிஎம் நிறுவனம் தன்னுடைய வலை பதிவில் கூறியிருப்பதாவது:

வாடிக்கையாளர்கள் தங்க ளுடைய கிரெடிட் கார்டில் இருந்து, வாலட்டுக்கு பணத்தை அனுப்பி, அதன் பிறகு வாலட்டில் இருந்து வங்கி சேமிப்பு கணக்குக்கு இலவசமாக பணத்தை மாற்றி வருகின்றனர். எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இது போன்ற நடவடிக்கைகளில் அதிக வாடிக்கையாளர்கள் ஈடுபட்ட தால் இந்த கட்டணம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மார்ச் 8-ம் தேதி முதல் 2 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேசமயம், நெட்பேங்கிங், டெபிட் கார்ட் மூலமாக வாலட்டுக்கு இலவசமாக பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

சாதாரணமாக பயன்படுத்து பவர்களுக்கு இந்த கட்டணம் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் தொழில்நுட்பத்தில் தேர்ந்த வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டில் இருந்து வங்கி கணக்குக்கு எளிதாக பணத்தை மாற்றி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கை அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் நடவடிக் கைகளால் பேடிஎம் அதிக தொகையை கார்டு நிறுவனங் களுக்கு செலுத்தி வருகிறது. இது போன்ற தவறான நடவடிக் கைகளைக் குறைப்பதற்காக இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த கட்டண விதிப்பால் உண்மையான வாடிக்கையாளர்களை அடை யாளம் கண்டுகொண்டு அவர் களுக்கு தரமான சேவையை வழங்கமுடியும். கிரெடிட் கார்டில் இருந்து வாலட்டுக்கு பணம் அனுப்பினால், 24 மணி நேரத்துக்கு தள்ளுபடி கூப்பன் வழங்கப்படும் என பேடிஎம் அறிவித்திருக்கிறது.

முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் சில கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை பேடிஎம் தடுத்தது. 20 கோடி வாடிக்கையாளர்கள் பேடிஎம் வாலட் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இன்னொரு வாலட் நிறுவனமான மொபிக்விக் கிரெடிட் கார்டு பயன்படுத்த தடை ஏதும் இல்லை. வாடிக்கையாளர்கள் கிரெ டிட் கார்டு மூலம் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருக் கிறது. இந்த நிறுவன செயலியை 5.5 கோடி வாடிக்கையாளர்களும், 14 லட்சம் வியாபரிகளும் பயன் படுத்துகிறார்கள். வரும் 2020-ம் ஆண்டில் 15 கோடி வாடிக்கையாளர் கள் மற்றும் 50 லட்சம் வியாபாரி களுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.

Advertisements