அதிக விக்கெட்டுகளுக்கான இந்திய சாதனையை தன் வசம் வைத்துள்ள முன்னாள் ஸ்பின்னர், தற்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, புஜாராவின் பேட்டிங் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக இடது கையில் பந்து வீசி அவருக்குப் பயிற்சி அளித்தார்.

புனேயில் ஆஸ்திரேலிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓகீஃபை விளையாட முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர், அவர் 12 விக்கெட்டுகளை 70 ரன்களுக்குக் கைப்பற்றி இந்திய அணியின் அதிர்ச்சித் தோல்விக்குக் காரணமானார்.

இந்நிலையில், பெங்களூருவில் புஜாரா இரண்டாவது இன்னிங்ஸில் 92 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். இது குறித்து அவர் பிச்சிஐ.டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ஆஸ்திரேலிய அணியில் இடது கை ஸ்பின்னர் இருப்பதால், அவரைப்போலவே இடது கையில் வீசினார் அனில் கும்ப்ளே. இடது கை ஸ்பின்னர் போலவே மூலையிலிருந்து ஓடி வந்து குறுக்காக பந்து ஸ்பின் ஆகுமாறு இடது கையில் ஸ்பின் செய்தார் அனில் கும்ப்ளே.

Advertisements