சென்னை: தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாட கூடிய நடிகர்களில் விஜய் தான் முதலிடம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களில் அதிகமாக தலை கட்டாதவர் விஷால். ஆனால் நடிகர் சங்கத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடும் அவர், தற்போது சில ஆடியோ விழா மேடைகளில் தோன்றி அந்த படங்களை வாழ்த்துவதோடு, தன்னை தாக்கிப்பேசி வரும் எதிரணியினருக்கு பதிலடி கொடுக்கவும் அந்த மேடைகளை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், நேற்று முன்தினம் பரத் நடித்துள்ள சிம்பா படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் விஷால். அப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடும் எதிரணியிருக்கு கொடுக்க வேண்டிய பதிலை அவர் சார்பில் டைரக்டர் மிஸ்கின் கொடுத்தார். அதனால் விஷால் அங்கு தேர்தல் குறித்து அதிகம் பேசவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதன்காரணமாக, அவர் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் பற்றி சில வார்த்தைகளோடு நிறுத்திக்கொண்டார்.

அதேசமயம், பரத்தின் நடிப்பைப்பற்றி பெருமையாக பேசினார். குறிப்பாக, தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாட கூடிய நடிகர்களில் பரத் குறிப்பிடத்தக்கவர். அந்தவகையில், விஜய்க்கு பிறகு நல்ல நடனமாடக்கூடியவர் பரத்தான் என்றார் விஷால். அவர் அப்படி சொன்னதும் மேடையில் அமர்ந்திருந்த பரத் எழுந்து நின்று அவரை பார்த்து வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

Advertisements