சென்னை: அதிமுக அரசின் மோசமான நிதிநிர்வாகத்தால் தமிழகம் கடனில் தத்தளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மோசமான நிதிநிர்வாகம், தாங்கமுடியாத கடனால் அதிமுக ஆட்சியில் தமிழக அரசு தத்தளிக்கிறது. அதிமுக ஆட்சியால் மாநில அரசின் புதிய கடனாக ரூ.1.56 லட்சம் கோடி உருவாக்கப்பட்டுள்ளது.பருப்பு, பாமாயில் கொடுக்க ஒப்பந்தம் கோரி கொள்முதல் செய்ய முடியாமல் அரசு தத்தளிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் கடனை குறைக்கவும், நிதி நிலையை சீராக்கும் திட்டங்கள் தேவை எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisements