சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிறப்பாக விளையாடி 262 ரன்கள் சேர்த்த டி வில்லியர்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டி வில்லியர்ஸ் தற்போது 875 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். 33 வயதான டி வில்லியர்ஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது இது 10-வது முறையாகும். அவர் முதன் முறையாக கடந்த 2010 மே மாதம் முதலிடத்தை கைப்பற்றியிருந்தார். 2009-ம் ஆண்டு செப்டம்பர் முதல் அவர் முதல் 5 இடங்களுக்கு வெளியே சென்றதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.ரோஹித் சர்மா 12-வது இடத்தையும், தோனி 13-வது இடத் தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். தொடக்க வீரரான ஷிகர் தவண் ஒரு இடம் பின்தங்கி 15-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டிய லில் இந்தியாவின் அக் ஷர் படேல் 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisements