சென்னை: அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான லதா என்ற பெண் வேலையின்றி கஷ்டப்படுவதை கேள்விப்பட்ட விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய் அவருக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். அவர் வீடு இல்லாமல் தவிப்பதையும் கேள்விப்பட்ட விவேக், தன்னுடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் ஒரு புதிய வீட்டையும் பரிசாக கொடுத்துள்ளார்.

அதோடு லதாவுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். அஜித்தை போல் மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை வைத்திருக்கும் விவேக் ஓபராயை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், அஜித் தான் தனது ரோல்மாடல் என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

Advertisements