டெல்லி: தேர்தல் வெற்றியால் தான் பெருமகிழ்ச்சி அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பாஜக சாதனை வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் அளித்துள்ள இதற்கு முன்னாள் இல்லாத அளவிளான ஆதரவால் பெருமகிழ்ச்சியடைந்தேன். இளைஞர்கள் அளித்துள்ள பேராதரவு மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மற்றுமொரு ட்வீட்டில், “பாஜக மீதான மக்கள் நம்பிக்கைக்கும், மக்கள் தரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த மாபெரும் வெற்றி என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements