சென்னை: விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரஜினி நடிப்பில் 1982-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `மூன்று முகம்’ படத்தின் தலைப்பையே `விஜய் 61′ படத்திற்கு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜயை இயக்க பலரும் போட்டி போட்டு வருகிறார் அந்த லிஸ்டில் இயக்குனர் மணி ரத்தினம் அவர்களும் இணைந்து கொண்டு உள்ளார் என தெறிகிறது. அட்லீ க்கு அப்புறம் இயக்குனர் நேசன் மற்றும் எழில் ஆகிய இயக்குனர்கள் விஜயை வைத்து படம் இயக்க அதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தெறிகிறது இந்த நிலையில் மணி ரத்தினம் படத்தில் விஜய் அடுத்து நடிப்பார் என்று தகவல் ஒன்று கசிந்து வருகிறது அது உறுதியானால் இரசிகர்கள் சந்தோஷ வெள்ளத்தில் குதிப்பார்கள்.

Advertisements