இந்தியா: ஹாங்காங்கில் டி20 பிளிட்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு போட்டியில் ஹங் ஹோம் ஜக்குவார்ஸ் – ஹாங்காங் ஐலேண்டு யுனைடெட் அணிகள் மோதிய ஒரு போட்டியில் மிஸ்பா 6பந்துகளில் 6சிக்ஸர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

இம்ரான் ஆரிஃப் வீசிய 19வது ஓவரில் 5-வது மற்றும் 6-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் மிஸ்பா. 20வது ஓவரை கேட்டி வீசினார். முதல் பந்தில் சயீத் அஜ்மல் ஒரு ரன் அடிக்க அடுத்த நான்கு பந்துகளிலும் மிஸ்பா சிக்சருக்கு விரட்டினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 6 பந்துகளை சிக்சருக்கு தூக்கி சாதனைப்படைத்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.மிஸ்பா 37 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 82 ரன்கள் சேர்க்க, ஹாங்காங் ஐலேண்ட் யுனைடெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. பின்னர் சேஸிங் செய்த ஹங் ஹோம் ஜக்குவார்ஸ் அணி 183 ரன்கள் மட்டுமே சேர்க்க ஹாங்காங் ஐலேண்ட் யுனைடெட் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.                     ஹாங்காங்கில் டி20 பிளிட்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு போட்டியில் ஹங் ஹோம் ஜக்குவார்ஸ் – ஹாங்காங் ஐலேண்டு யுனைடெட் அணிகள் மோதிய ஒரு போட்டியில் மிஸ்பா 6பந்துகளில் 6சிக்ஸர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

Advertisements