இந்தியா: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பயிற்சியாளரான அனில் கும்ப்ளே, இந்திய அணியின் இயக்குனராக பதவி உயர்வு பெற இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நடப்பு ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கமிட்டியின் ஒப்புதல் பெற்று இந்த மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணியின் இயக்குனராக வரும் ஏப்ரல் 14 முதல் அனில் கும்ப்ளே செயல்படுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements