புது டெல்லி: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் விடுமுறை அளிக்கும் மசோதா நாடாளுமண்டத்தில் கடந்த வியாழக்கியமை நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இதுவரை 12 வாரங்களாக இருந்து வந்த பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை 26 வாரங்களாக உயர்த்தப்படுகிறது.

குடியரசு தலைவர் ஒப்புதலுக்குப்பின் இந்த மசோதா சட்டமாக்கப்படும்.

மேலும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்களில், குழந்தைகளை பராமரிக்கும், ‘கிரீச்’ அமைக்கப்பட வேண்டும். அந்த கிரீச்சில் உள்ள தன்னுடைய குழந்தைக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் தாய்ப்பால் அளிக்க, பெண் ஊழியருக்கு அனுமதி அளிக்க வேண்டும், மூன்றாவது குறையாது குழந்தை பெறும் பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கும் 12 வார மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்பது போன்ற அம்சங்களும் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.

Advertisements