இந்தியா: விராட் கோஹ்லியை விலங்குகளுடன் ஒப்பிட்டு கருது கணிப்பு நடத்தி ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய சர்ச்சை எழுப்பியுள்ளது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட டிஆர்எஸ் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பெங்களூரு டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த பெவிலியனில் உள்ள வீரர்களிடம் உதவி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல்வேறு பேச்சுவார்தைகளுக்குப்பின் இந்தியா ஐ.சி.சி.-இடம் இருந்த புகாரை திரும்பப் பெற்றது. பின்னர் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு கவனம் திரும்பியது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணையதளம் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை, விலங்குகளுடன் ஒப்பிட்ட செயல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தின் ஸ்போர்ட்ஸ் வில்லன் யார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாண்டா கரடி, பூனைக்குட்டி மற்றும் நாய் ஆகிய விலங்குகளின் வரிசையில் விராத் கோலியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

Advertisements