சென்னை: ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கடம்பன் படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடிகளின் வாழ்க்கை வழியாக உலகமயமாக்கல் குறித்து பேசியுள்ள கடம்பன் படத்தில் ஆர்யா, கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் நடத்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி மற்றும் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கடம்பன் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisements