அரியலூர்: ஜாமீனில் வெளிவரும் நபர்கள் 100 சீமை கருவை மரங்களை அகற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட நீதிபதியான ஏ.கே.ஏ ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரும் போது, ‌ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனையில் 100 சீமைக்கருவை ம‌ங்களை அகற்ற வேண்டும் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஜாமீனில் விடுவிக்கப்படும் நபர் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவை மரங்களை அகற்றி, கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வாங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் சீமைக்கருவை மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மாவட்ட நீதிபதிகள் அந்த பணிகளை கண்காணித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜாமீனில் வெளியே செல்பவர்கள் 100 சீமைக்கருவைகளை அகற்ற வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான்.

Advertisements