இந்தியா: டெக் உலக ஜாம்பவான்களான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கைகோர்க்க இருப்பதாக சிலிக்கான் வேலியில் ஒரு தகவல் பரவி வருகிறது.

டெக் உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பரம வைரிகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு தயாரிப்பிலும் இவ்விரு நிறுவனங்கள் இடையிலான போட்டியை டெக் பிரியர்கள் இனம் கண்டு சுட்டிக் காட்டுவதுண்டு. இந்த நிலையில், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் புதிய திட்டம் ஒன்றுக்காக கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதாரமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆகியோர் உணவகம் ஒன்றில் சந்தித்துப் பேசுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவி வருகிறது. ஆனால், சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக் சந்தித்து பேசியது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisements