சென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா படத்தின் டிரெய்லர் இணையத்தில் ஹிட் அடித்தது. படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படம் வெளியாவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. டோரா படத்தில் கார்தான் முக்கிய கதாபாத்திரம். இந்த தகவல் வெளியானவுடன் உதவி இயக்குநர் ஸ்ரீதர் என்பவர் காரை மையமாக வைத்து நான் எழுதியுள்ள ‘அலிபாபாவும் அற்புதக் காரும்’ என்ற கதையைத்தான் டோரா திரைப்படமாக இயக்கியுள்ளனர் என தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

ஆனால் டோரா பட இயக்குநர் தாஸ் ராமசாமி, ஏற்கனவே தனது கதையை முறையாகப் பதிவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் இருவரையும் தனித்தனியாக அழைத்து முழுக்கதையையும் கேட்டறிந்தனர். அதன்பின் இரு கதைகளும் வெவ்வேறு கதைகள் எனக்கூறி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.இதனால் டோரா படம் வெளியாவதில் இருந்த பெரிய சிக்கல் நீங்கியுள்ளது. எனவே, விரைவில் ரசிகர்கள் டோராவை திரையில் கண்டு ரசிக்கலாம்.

Advertisements