சென்னை: பாகுபலி 2 ட்ரெய்லர் லீக்கானதற்கு காரணம் என்னவென்று பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமவுலி கண்டுபிடித்தார்.

பாகுபலி 2 பட ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் பதிப்பு மட்டும் இணையதளத்தில் கசிந்துவிட்டது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் பிற மொழி பதிப்புகளையும் படக்குழு ஆன்லைனில் வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ராஜமவுலி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு பக்(bug) காரணமாக ட்ரெய்லர் கசிந்துவிட்டது. பைரஸி வேறு லீக் வேறு. ட்ரெய்லர் லீக்கானதால் படக்குழுவினர் அனைவரும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

உண்மை முழுதாக தெரியாமல் யாரையும் குறை சொல்ல முடியாது என்றார்.

Advertisements