ராஞ்சி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 19 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மார்ஷ் மற்றும் ஹண்ட்ஸ்காம் வந்த வேகத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் கேப்டன் ஸ்மித்துடன் இணைந்து நிதானமான ஆட்டதை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய ஸ்மித் தனது 19வது சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்மித் 117*,மேக்ஸ்வெல் 82* ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Advertisements