இந்தியா: கடந்த 2014ஆம் ஆண்டு, ‘வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் வாங்கியது. அதன்பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தனிநபர் கொள்கைகளில் மாற்றங்கள் செய்தது. அதன்படி, வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் தொலைபேசி எண்கள், பயன்படுத்தும் சாதனம் குறித்த தகவல்கள், இயங்குபொருள் (OS) வகைப்பாடு, ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் போன்ற விவரங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.

அதைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் உள்ளிட்ட எந்த விபரத்தையும் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஃபேஸ்புக்கில் பரிமாறக் கூடாது என்றும், வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாட்ஸ் அப்பில் உருவாக்கப்பட்ட என்க்ரிப்ஷனில் புதிய பிழை உள்ளதால் 10 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செக் பாயிண்ட் என்னும் கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாட்ஸ்அப் கணக்குகளின் பாதுகாப்புக்காக என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் முறையில் பாதுகாப்பு தாயார் செய்யப்பட்டது. ஆனால் வாட்ஸ்அப்-ன் கணினி பதிப்புகளில் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய பிழை மூலம் பெரும்பாலான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் அக்கவுண்ட்களை ஒரு புகைப்படத்தை அனுப்பி முழுமையாக ஹேக் செய்ய முடியும். அதேபோல், வாடிக்கையாளர் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இயக்க முடியும். மேலும் புதிய பிழையைப் பயன்படுத்தி டிஜிட்டல் புகைப்படத்தில் ரகசியக் குறியீடுகள் மூலம், வாடிக்கையாளர் தரப்பில் புகைப்படத்தை கிளிக் செய்யப்பட்டதும் அக்கவுண்டை முழுமையாக இயக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

Advertisements