தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இலை தழைகளை அணிந்து வந்த விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டபடி வெளிநடப்புச் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அங்கு இலை தழைகளை அணிந்து பேரணியாக வந்த விவசாயிகள், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக அரசு வழங்கும் நிவாரணத் தொகையை வங்கிகள் வழங்காமல், கணக்கில் வரவு வைத்துக் கொள்வதால், பெரும் துயரத்திற்கு ஆளாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisements