அமெரிக்கா: தேவைப்பட்டால் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கடந்த மாதம் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ‘தென்கொரியாவுக்கு அமெரிக்கா முழு ராணுவ உதவி வழங்கும். முழுப் பாதுகாப்பும் அளிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

வடகொரியா அணு ஆயுத சோதனைகள், கண்டம்விட்டுகண்டம் பாயும் ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. வடகொரியாவின் இந்த செயல் தென்கொரியா மற்றும் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தென்கொரியாவில் தனது ராணுவத்தை நிலைநிறுத்துவதன் மூலம், வடகொரியாவை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. தென்கொரியா சுற்றுப் பயணத்தின்போதே, அந்நாட்டில் அமெரிக்கா ராணுவத்தை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை செய்தது.

தென் கொரியாவில் அமெரிக்கா தனது ராணுவத்தை நிறுத்திய செயல் சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் வடகொரியாவின் தாக்குதலைத் தவிர்ப்பதற்காகத் தான் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது’ என்று அமெரிக்காவும், தென்கொரியாவும் விளக்கம் அளித்தன. இந்த நிலையில், அமெரிக்க அமைச்சர் டில்லர்சன். ‘தேவைப்பட்டால் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும். பொறுமைக்கும் எல்லை உண்டு. வடகொரியா தனது அணுஆயுத எண்ணத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements