சென்னை: வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ”அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

Advertisements