புதுடெல்லி: ஆக்ராவில், கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே, இன்று இரட்டைக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாஜ்மஹால்மீது தாக்குதல் நடத்துவோம் என்று தீவிரவாதிகள் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், ஆக்ராவில் இன்று சக்தி குறைந்த இரட்டைக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த டிராக்டர் ஒன்றிலும், குடியிருப்புப் பகுதி மொட்டைமாடியிலும், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். குறிப்பாக, இந்தச் சம்பவத்தால், ரயில் சேவை ஏதும் பாதிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

தீவிரவாதிகளின் எச்சரிக்கையை அடுத்து நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements