சென்னை: ரஜினி ரசிகர்களின் தற்போதைய கேள்விகள், அடுத்த படத்தின் ஹீரோயின் யார்? எந்திரன் 2.0 டிரெயலர் எப்போது ரிலீஸாகும்? அடுத்த படம் எப்போது ஸ்டார்ட்? ஆகியவை தான். இவற்றுக்கான சில தகவல்களைத் தான் இன்று பார்க்கப்போகிறோம்.

ரஜினி – ரஞ்சித்தின் இரண்டாவது திரைப்படத்துக்கு பாலிவுட் ஹீரோயின் தான் நடிக்கிறார் என்பது உறுதியான தகவல். ஆனால், தீபிகா படுகோனே அந்த லிஸ்டிலிருந்து தூக்கப்பட்டுவிட்டதாக ரஞ்சித் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இப்போது ரஞ்சித் வீசிய பந்து, வித்யா பாலனின் களத்தில் இருக்கிறது. தனுஷ் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு ஸ்ட்ராங்கான ஹீரோயின் தேவை என்பதில் தனுஷும் ஸ்ட்ராங்காக இருக்கிறார். எனவே, வித்யா பாலனிடம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கலாம்.

எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 96 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. பாடல்கள் மட்டும் தான் பேலன்ஸ் வைத்திருக்கிறார்கள். அவற்றை விரைவில் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள். ஆனால், எதற்கும் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். ரஹ்மானின் ஒரு பாடல் படத்தில் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அல்லது, அந்தப் பாடலுக்கு ரஜினியின் ஆட்டம் இல்லாமல் போகக்கூடும். பாடல்கள் மட்டும் மீதமிருப்பதால், டிரெய்லர் கட் செய்யும் வேலையில் எந்த பாதிப்பும் இல்லை. வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி எந்திரன் 2.0 டிரெய்லர் ரிலீஸாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில், அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் படபூஜையுடன் ரஜினி – ரஞ்சித் இணையும் திரைப்படம் தொடங்குகிறது. எந்திரன் 2.0 ஷூட்டிங்குக்குப் பிறகு ரஜினிக்கு ஓய்வு தேவைப்பட்டதால் இந்தத் திரைப்படத்தின் தொடக்கம் தள்ளிப்போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements