சென்னை: அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அக்‌ஷரா ஹாசன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, அதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் டீசர், ட்ரைலருக்கு தான் வெயிட்டிங்.ஏற்கனவே அஜித்தின் வீரம், வேதாளம் படத்தின் ரீமேக் ரைட்ஸை பவன் கல்யான் வாங்கியது அனைவரும் அறிந்ததே.

தற்போது விவேகம் படத்தையும் பவன் கல்யான் எதிர்நோக்கி காத்திருக்கின்றாராம், அப்படத்தின் ரிசல்ட்டை பொறுத்து அதையும் வாங்க ரெடியாகவுள்ளாராம்.

Advertisements