சென்னை: இந்தியக் கடலோரக் காவல் படையில் நாவிக் பிரிவிலான ஜெனரல் டியூட்டி பணியாளர்களை நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கல்வித் தகுதி: +2 (குறைந்து 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்)

வயது வரம்பு: 18 வயது முதல் 22 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறனறியும் தேர்வு, நேர்காணல், குழு விவாதம், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி நடைபெறும்.

கடைசி தேதி: 22.03.2017

மேலும் முழுமையான விவரங்களுக்கு : http://www.joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/NAVIKGD_217.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Advertisements