சென்னை: இந்திய விண்வெளி குழு ஒன்று நிலவில் பீர் காய்ச்ச ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

நிலவிற்கு மூன் லேண்டர் ஒன்று டிசம்பர் 28-ம் தேதி பயணிக்கிறது. இதில் குழுக்களை அனுப்புவதற்காக உலகளாவிய போட்டி நடைப்பெற்று வருகிறது. இதில் 25 குழுக்கள் பங்கேற்றுள்ளன.தனியார் நிதியுதவியுடன் செயல்படும் இந்தியாவை சார்ந்த ‘இந்தஸ்’ எனும் டீம் நிலவில் ஈஸ்டை பயன்படுத்தி பீர் காய்ச்சும் ஒரு யோசனையை முன் வைத்துள்ளது.

இதன் மூலம், விண்வெளியிலும் நிலவின் ஈர்ப்பு விசையிலும் ஈஸ்ட் எவ்வாறு செயல்படுகிறது என கண்காணிக்க இருப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது. இதற்கான விண்கலம் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-யில் செல்ல இருப்பதாக தெரிகிறது. இது போன்ற விண்கல ஏவுதல்களை கட்டணச் சேவையாக இஸ்ரோ நடத்தி வருகிறது.

இந்த குழுவிற்கும் இஸ்ரோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.