சென்னை: விஜய்யின் டைமிங் காமெடியும் அஜீத்தின் அமைதியும் தனக்குப் பிடிக்கும் என நடிகை காஜல் அகர்வால் கூறினார்.

அட்லீயின் பெயரிடப்படாத படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். அஜீத்தின் விவேகம் படத்திலும் நடித்துவருகிறார். ஒரே நேரத்தில் விஜய், அஜீத்துடன் நடித்துவரும் காஜல் கூறும்போது, ‘இரண்டு பெரிய நடிகர்களுடன் ஒரே நேரத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விஜய்யுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது அவரது டைமிங் காமெடி பிடிக்கும். இப்போது அவருடன் நடிக்கும் படத்தின் கதையும் எனது கேரக்டரும் அழகானது.

அஜீத்துடன் இப்போதுதான் நடிக்கிறேன். செட்டில் அவரது அமைதி எனக்குப் பிடிக்கும். ஷாட்டுக்கு ரெடியாகிவிட்டால் அதில் மூழ்கிவிடுவார். விஜய்யும் அஜீத்தும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள்’ என்றார் காஜல். அவரிடம், இரண்டு பேரில் யார் நன்றாக நடனம் ஆடுகிறார்கள் என்று கேட்டதற்கு, ‘இரண்டு பேருக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கிறது. அதில் இருவருமே சிறப்பானவர்கள். அதை ஒப்பிடத் தேவையில்லை’ என்றார் காஜல்.

Advertisements