காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஜம்மு- ஶ்ரீநகர் இடையே, நடைபெற்ற நாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஜம்மு – ஶ்ரீநகர் இடையில் உள்ள 286 கி.மீ தூரத்துக்கு 4 வழிப்பாதை அமைக்கும் பணி 3720 கோடி ரூபாய் மதிப்பில், 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பணி செய்கையில் இடையில் மலைப்பாதை ஒன்று குறுக்கிடவும், அந்த மலைப்பகுதிக்கு இடையே இருக்கும் 9.2 கி.மீ தூரத்துக்கு மலையைக் குடைந்து, இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியைத் திட்டமிட்டது இந்திய அரசு.

கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி துவங்கிய, இப்பணி தற்போது சிறப்பான முறையில் நிறைவுற்று, சோதனை ஓட்டமும் நிறைவடைந்துள்ளது.

இந்த சுரங்க பாதையில் கட்டுப்பாட்டு அறை, அவசர காலத்தில் தொடர்புகொள்ளும் நவீன சாதனங்கள், தீயணைப்பு வசதிகள் , மொபைல் நெட்வொர்க் வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப்பாதை மூலம் 41 கி.மீ சுற்றிசெல்லும் தற்போதைய போக்குவரத்து நடைமுறை, 9.2 கி.மீட்டராக குறைந்துள்ளது. மேலும் இவ்வழியில் எரிபொருள் டேங்கர் லாரிகள், அனுமதிக்கப்படுவதில்லையாம்.இதை கூடியவிரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

Advertisements