தமிழ் நாடு: பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.2,750 கோடி நிதியை கேட்டுப் பெறாமல் தமிழக அரசு மெத்தனப் போக்கால் இழந்துள்ளது.

அரசு பள்ளிக் கல்விக்காக மட்டுமல்லாமல், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவு ஏழை மாணவர்கள் சேர்ந்து இலவசமாக படிப்பதற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது. அதில் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழகத்துக்குதரவேண்டிய ரூ.2,750 கோடியை தமிழக அரசு கேட்டு வாங்காமல் இழந்துள்ளது. அண்மையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பொதுநல வழக்கு

தொடரப்பட்டது. அந்த மனுவில் மத்திய அரசு நடத்தும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் ஒன்றுகூட தொடங்கப்படவில்லையே ஏன்? என்ற கேள்விக்கு தமிழக அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று மனுதாரர் குறிப்பிட்டிந்தார். இந்நிலையில், பள்ளிக் கல்விக்கு மத்திய அரசு வழங்க

வேண்டிய ரூ.2,750 கோடியை தமிழக அரசு தனது மெத்தனப்போக்கால் இழந்துள்ளது. இதனை, தமிழக அரசும் பட்ஜெட் தாக்கல் செய்தபோது வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ரூ.1,476 கோடி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி

இயக்கத்தில் ரூ.1,266 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், அதற்கான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிதி இழப்புக்கு காரணம், தமிழக பள்ளிக் கல்வித்துறை முறையாக பணிகளைத் தொடங்கி உரிய காலத்தில் முடிப்பது இல்லை. மத்திய அரசு தெரிவிக்கும் விதிகளின்படி, ‘டெண்டர்’ அறிவித்தல், திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாய கல்வி சட்டத்தில்,மாணவர்களை சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில்லை. என்று தெரியவந்துள்ளது. மேலும், பள்ளிக்கல்வி செயலரை அழைத்து, மத்திய அரசு அதிகாரிகள் பல முறை அறிவுறுத்தியும் எந்த பயனும் இல்லை. இதனால், தமிழக அரசு, மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய ரூ.2,750 கோடியை இழந்துள்ளது. ரூ.3,14,366 கோடி கடனில் இருக்கும் மாநிலம் இப்படி பெற வேண்டிய நிதியை இழந்துள்ளதற்கு பொறுப்பேற்பது யார்?

Advertisements