தமிழ்நாடு: திறமைமிக்க தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் தமிழகத்தில் இருப்பதால், ஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்து தொழில் மேற்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜப்பானிய நிறுவனங்கள் மீது இந்திய தொழிற்துறையின் எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில், சென்னையிலுள்ள இந்தியா – ஜப்பான் வர்த்தக தொழில் கூட்டமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தமிழகத்தைச் சேர்ந்த 122 நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில், 39 சதவிகித நிறுவனங்கள் தொழில்நுட்பத்துக்காகவும், தொழிலை அறிந்துகொள்ளவும், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளன.

புதிய பொருட்களைத் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் துணைபுரிவதாக 25 சதவிகிதத்தினரும், சர்வதேச சந்தையில் சுலபமாக நுழைய ஜப்பான் நிறுவனங்கள் உதவிகரமாக இருப்பதாக 17 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் முதலீடு செய்வது லாபகரமானதல்ல என்பதால் அதை விரும்பவில்லை என, ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதப் பேர் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலுள்ள ஜப்பானிய நிறுவனங்களில் 50 சதவிகித நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements